மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

இந்தியத் திரையுலகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றத் திரைப்படங்களில் 'காந்தாரா' மற்றும் 'காந்தாரா சாப்டர் 1' ஆகிய படங்களைச் சொல்ல வேண்டும். அந்தப் படங்களை இயக்கி நாயகனாக நடித்தவர் ரிஷப் ஷெட்டி. இந்த இரண்டு கன்னடத் திரைப்படங்களையும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.
2022ல் வெளிவந்த 'காந்தாரா' படம் சுமார் 15 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. 2025ல் வெளிவந்த 'காந்தாரா சாப்டர் 1' படம் சுமார் 100 கோடி செலவில் தயாராகி 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இந்நிலையில் இப்படங்களின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தை இன்ஸ்டாகிராம் தளத்தில் பாலோ செய்ததை ரிஷப் ஷெட்டி 'அன்பாலோ' செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இரு தரப்புக்கும் இடையே வியாபார ரீதியில் ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
'காந்தாரா சாப்டர் 1' படத்திற்காக சம்பளம் பெறாமல் லாபத்தில் பங்கு என ரிஷப் ஷெட்டி பேசியிருந்ததாகவும் சொல்கிறார்கள். அவற்றில் ஏதும் சிக்கலா என்பதும் தெரியவில்லை. இருந்தாலும் இரண்டு தரமான படங்களைக் கொடுத்த தயாரிப்பாளரும், இயக்குனரும் இப்படி பிரிவது கன்னட சினிமாவுக்கு சரியல்ல என கன்னட ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.