'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

கேரளாவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் என்கிற ஹிரண் தாஸ். சமூகத்தில் நிகழும் பிரச்னைகளை தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்தி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். மேடை நிகழ்ச்சிகள் தொடங்கி இசை ஆல்பம் பலவற்றில் பாடியுள்ள வேடன், சினிமாவிலும் என்ட்ரி ஆனார். மலையாளத்தில் ஹிட்டான 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தில் ஒரு ராப் பாடல் பாடி சினிமாவில் காலடி எடுத்துவைத்தார். தமிழில் 'பைசன்' படத்திலும் பாடியிருப்பார்.
இவர், எழுத்தாளர் நவமி லதா என்பவரை நீண்டகாலமாக காதலித்து வந்தார். இருவரும் திருச்சூர் திரூரில் உள்ள இல்லத்தில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையான முறையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தத் திருமணத்தைப் பதிவு செய்ய, செம்புக்காவு துணைப் பதிவாளர் நேரில் சென்றிருந்தார். மணமக்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.