தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது |

எம்.ஜி.ஆர் நடிப்பில் 1956ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் 'மதுரை வீரன்'. பானுமதி, பத்மினி ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்த இந்த படத்தை லோனா செட்டியார் தயாரித்திருந்தார்.
படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துவிட்டது. ஆனாலும் தயாரிப்பாளர் லேனா செட்டியார் நடிகை பத்மனிக்கு கொடுத்த வாக்கின் காரணமாக அவருக்காக எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் தனியாக ஒரு பாடலை படமாக்கியுள்ளார். இந்த விஷயம் எம்.ஜி.ஆருக்கு தெரியவர, இந்த பாடல் படத்தை கெடுத்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்த எம்.ஜி.ஆர் படத்தை வெளியிட வேண்டாம் என்று கூறியுள்ளார்.
நான் பணம் போட்டு படம் எடுத்திருக்கிறேன். இதில் என்ன வேண்டும் என்ன வேண்டாம் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் என்று லேனா செட்டியார் சொல்ல, இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த பிரச்னை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. படத்தை பார்த்த என்.எஸ்.கிருஷ்ணன் பத்மினி பாடல் படத்திற்கு தடையாக இல்லை, பலமாகத்தான் இருக்கிறது என்பதை எம்ஜிஆரிடம் கூறியுள்ளார்.
ஆனாலும் எம்ஜிஆர் விடுவதாக இல்லை. நன்றாக இருக்கிறதோ, இல்லையோ என்னை கேட்காமல் பத்மினிக்கு பாடல் வைத்தது தவறு அதை ஏற்க மாட்டேன் என்றார். ஆனாலும் என்.எஸ்.கே பொறுமையாக எம்ஜிஆரிடம் பேசி தயாரிப்பாளர் வட்டிக்கு வாங்கி படம் எடுத்த விஷயத்தை சொல்லி படம் வராவிட்டால் அவர் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகி விடுவார் என்பதை சொல்லி எம்ஜிஆரை சம்மதிக்க வைத்தார்.
அதன்பிறகு 'மதுரை வீரன்' படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. என்றாலும் பத்மினியின் பாடல் படத்திற்கு தேவைப்படாத ஒன்று என்ற கருத்தில் இருந்து எம்ஜிஆர் மாறவில்லை.