வெப் தொடரில் மிதிலா பால்கர்
ஜூன் 22, 2026
Advertisement
மராட்டிய சினிமாவில் முன்னணி இளம் நடிகையாக இருப்பவர் மிதிலா பால்கர். "மஜா ஹனிமூன்" என்ற மராட்டிய குறும்படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். அடிப்படையில் பாடகியான இவர் மராட்டிய மொழியின் அடையாளமான ‛கப்" பாடல் மூலம் பிரபலமானார். நம்ம ஊரு கானா பாடல் மாதிரி இந்த பாடல். மிதிலாவின் கப் பாடல் யு-டியூபில் 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகியது. போர்ப்ஸ் சாதனையாளர்கள் பட்டியலில் 30 வயதிற்குட்பட்ட 30 இளம் சாதனையாளர்களின் பட்டியலில் இடம் பெற்றார். 2020ம் ஆண்டில், 35 வயதுக்குட்பட்ட "இந்தியாவின் தொழில்முனைவோர் 35" என்ற பட்டியலில் இவர் இடம் பிடித்தார்.
இந்தி, மராட்டி படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து வந்த மிதிலா தமிழில் "ஓஹோ எந்தன் பேபி" படத்தின் நாயகியாக நடித்தார். இதில் அவர் விஷ்ணு விஷாலின் தம்பி ராகுல் ஜோடியாக நடித்தார். இந்த படம் வெற்றி பெறாததால் மீண்டும் மராட்டிய சினிமாவிற்கே திரும்பினார்.
இந்த நிலையில் தற்போது "சூப்பர் சுப்பு" என்ற தெலுங்கு வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் அவர் சந்தீப் கிஷன் ஜோடியாக நடித்துள்ளார். பாலியல் விழிப்புணர்வை வலியுறுத்தும் தொடராக இது தயாராகி உள்ளது. வருகிற ஜூலை 2ம் தேதி வெளியாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!