
கனவு நனவான தருணம் : மிர்னா மேனன்
அப்போது பேசிய மிர்னா, மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நான் அதிகப்படியாக தீவிரமான கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ளேன். வித்தியாசமாக ஏதேனும் முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு ரொமான்டிக் காமெடி படத்தில் நடிக்க நீண்ட நாட்களாக ஆசைப்பட்டேன். அந்த வாய்ப்பை டான் போஸ்கோ படம் எனக்கு கொடுத்துள்ளது.
ஜெயிலர் 1, 2 படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்துப் பேசிய அவர், அது ஒரு கனவு நனவான தருணம். சிறுவயதிலிருந்தே என் வாழ்க்கையில் அடைய வேண்டிய இலக்குகளை ஒரு புத்தகத்தில் எழுதி வைக்கும் பழக்கம் எனக்கு உண்டு. அதில், ரஜினி, நாகார்ஜுனா, மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோருடன் இணைந்து நடிக்க வேண்டும் என எழுதியிருந்தேன். இவை அனைத்தும் மிகக் குறுகிய காலத்தில் நடந்து விட்டன. இதற்காக நான் பிரபஞ்சத்திற்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…