'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மகாராஜா, போர் தொழில், ஆர் யூ ஓகே பேபி உள்ளிட்ட சில படங்களில் குணசித்ர நடிகையாக நடித்தவர் முல்லை அரசி. 'கொட்டுக்காளி' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்து பிரபலமானார்.
இந்த நிலையில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் முல்லை அரசி நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை அஜித் விநாயகா பிலிம்ஸ் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்குகிறார்கள். கதாநாயகியாக சேத்தன், 'பருத்திவீரன்' சரவணன் உட்பட பலர் நடிக்கிறார்கள். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
படம் குறித்து விமல் கூறும்போது, "எப்போதுமே கிராமத்து படங்களுக்கு என்று தனி எதிர்பார்ப்பு இருக்கும். கிராமத்து கதைக்களம் கொண்ட படங்கள் ரசிகர்களின் மனதை எளிதில் ஈர்க்கும். எனக்கும் மற்ற கதைகளை விட கிராமத்து கதைகளில் நடிப்பது மிகவும் பிடிக்கும். அந்தவகையில் இந்த புதிய படம் அமைந்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே என் வேலை. இனி பழைய சுறுசுறுப்புடன் என் நடிப்பை பார்க்கலாம்'', என்றார்.