தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
'தக் லைப்' படம் வெளிவருவதற்கு முன்பாகவே சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியானது. அவரது 49வது படத்தை 'பார்க்கிங்' படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க, கயடு லோஹர் கதாநாயகியாக நடிக்க, சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அறிவித்தார்கள்.
சிம்புவின் 50வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க சரித்திரப் படமாக பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. சிம்புவே அந்தப் படத்தை சொந்தமாகத் தயாரிக்க உள்ளார். அதற்கடுத்து சிம்புவின் 51வது படத்தை 'டிராகன்' படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இயக்குவார் என்றும் அறிவிப்புகள் வந்தது.
இதனிடையே, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் கடந்த வாரம் முதல் வெளிவந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு அப்படத்திற்கான முன்னோட்ட வீடியோவுக்கான படப்பிடிப்பும் சென்னையில் நடந்தது.
'வட சென்னை' படத்தின் முன்கதைப் பகுதியாக உருவாக உள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது உருவாக்கி வரும் வீடியோவுடன் வெளியாகும் என்று தெரிகிறது. அதிலேயே இது என்ன மாதிரியான படம் என்பதை ரசிகர்களுக்குத் தெரியப்படுத்த உள்ளார்களாம்.