பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

‛லவ் டுடே, டிராகன், டியூட்' படங்களுக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (சுருக்கமாக ‛எல்ஐகே'). விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் டிசம்பர் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமை இன்னும் விற்பனை ஆகவில்லை என்பதால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், எல்ஐசி பட வட்டாரங்களில் விசாரித்தபோது, இந்த படத்தின் ஓடிடி உரிமை விற்பனையாகவில்லை என்றாலும் கூட படத்தை டிசம்பர் 18ம் தேதி வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் லலித்குமார் தயாராகி விட்டார். அதனால் திட்டமிட்டபடி அடுத்த மாதம் எல் ஐ கே திரைக்கு வந்து விடும் என்கிறார்கள்.
மேலும், இந்த படம் காதல், காமெடி கலந்த சயின்ஸ் பிக்ஷன் கதையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய ஒரு படமாக இருக்கும். அதோடு இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார். அதனால் இந்த படம் பிரதீப் ரங்கநாதனின் முந்தைய வெற்றி படங்கள் வரிசையில் இடம்பெறும் என்கிறார்கள்.