பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் நடித்த 'கிங்டம்' படம் கடந்தவாரம் வெளியானது. தெலுங்கில் வெளியான இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு இங்கும் வெளியானது.
இந்த படத்தின் கதை இலங்கையில் நடப்பது போன்று உள்ளது. இதில் இலங்கை தமிழர்களை தவறாக சித்தரித்திருப்பதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். படம் வெளியாகி உள்ள தியேட்டர்களின் முன் போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், தமிழகத்தில் இந்த படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை பெற்றுள்ள எஸ்.எஸ்.ஐ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், "முழுக்க முழுக்க கற்பனை கதையான இந்த படம், தமிழீழ பிரச்னை குறித்த உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எடுக்கப்படவில்லை. முறையாக தணிக்கை சான்று பெற்று படம் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர், சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு படம் திரையிடப்படுவதை தடுக்க முடியாது.
பெருந்தொகை செலவிட்டு, படத்தை வெளியிட்டுள்ள நிலையில், உரிய பாதுகாப்பு வழங்காவிட்டால் வினியோக நிறுவனமான தங்களுக்கு மட்டுமல்லாமல் திரையரங்குகளுக்கு பெருத்த பாதிப்பு ஏற்படும். படம் தடையின்றி திரையிடப்படுவதை உறுதி செய்ய உரிய பாதுகாப்பு வழங்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.