கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் கிங்டம் திரைப்படம் வெளியானது. பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் கவுதம் தின்னனூரி இயக்கியுள்ளார், அனிருத் இசை அமைத்துள்ளார். பாடல்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியான இந்த படத்தை பார்க்கச் சென்ற ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், இந்த இந்த படத்திற்காக முதன் முதலில் வெளியிடப்பட்ட ஹிருதயம் லோபலா என்கிற பாடல், படத்தில் இடம் பெறவில்லை. இத்தனைக்கும் ரசிகர்களிடம் மிகவும் வரவேற்பு பெற்ற ஒரு ரொமாண்டிக் பாடல் இது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது குறித்து தயாரிப்பாளர் நாக வம்சியிடம் கேட்கப்பட்டபோது, “இந்த படத்தை நீங்கள் பார்த்து விட்டீர்களா ? இந்த பாடலை பொருத்துவதற்கு இந்த படத்தில் எங்கே சரியான இடம் இருக்கிறது என்று சொன்னால், அங்கே இந்த பாடலை இடம்பெறச் செய்வேன். இந்த பாடலை இடம்பெறச் செய்ய எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால் அவை அனைத்தும் படத்தின் வேகத்தை குறைப்பது போல இருந்ததால் தான், படத்தில் இடம்பெறச் செய்ய முடியாமல் போனது” என்று கூறியுள்ளார்.