பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் | 400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் |
கருப்பு வெள்ளை சினிமா காலத்தில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்தவர் டி.ஆர்.மகாலிங்கம். நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு வந்த அவர் பல வெள்ளி விழா படங்களை கொடுத்தவர். புகழின் உச்சியில் இருக்கும்போது தானே சொந்தமாக படங்களை தயாரிக்கும் முடிவுடன் 'ஸ்ரீசுகுமாரன் புரோடக்சன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். 'மச்சரேகை 'என்ற படத்தை தயாரித்தார். அது சுமாராக ஓடியது. அதனையடுத்து 'விளையாட்டு பொம்மை' படத்தை தயாரித்தார். அதுவும் அவருக்கு பலன் தரவில்லை.
அடுத்து தானே 'சின்னத்துரை' என்ற படத்தை இயக்கினார். அதுதான் அவரது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. வழுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய 'இருமன கன்னிகள்' என்ற நாவலை திரைப்படமாக்கினார். இது ஒரு ரொமாண்டிக் திரில்லர் கதை.
இதில் அவருடன் எஸ்.வரலக்ஷ்மி, பி.ஆர்.பந்துலு, டி.கே.ராமச்சந்திரன், வி.கே.ராமசாமி, ஜே.பி.சந்திரபாபு, ஜி.சகுந்தலா, எஸ்.ஆர்.வரலட்சுமி, கே.சயீராம், 'ஸ்டண்ட்' சோமு, 'ஜெயக்கொடி' கே.நடராஜன், கே.எஸ்.ஹரிஹரன், ராமையா சாஸ்திரி, கே.ராமு, வேணுபாய், கே.எஸ்.அங்கமுத்து மற்றும் சி.ஆர்.ராஜகுமாரி, சௌதாமினி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது.
இந்த படம் பெரிய தோல்வி அடைந்தது. தொடர் தோல்விகளால் தன் சொத்துக்களை இழந்தார். அடுத்துவந்த நான்கு ஆண்டுகள் பட வாய்ப்புகள் இன்றி இருந்தார். நான்கு ஆண்டுகள் கழித்து 'மாலையிட்ட மங்கை' படத்தின் மூலமாக திரையுலகில் மீண்டு வந்தார். அதன்பிறகு எம்ஜிஆர், சிவாஜியின் காலம் வரை நடித்துக் கொண்டிருந்தார்.