பாரதிராஜா மறைவிற்கு திரை பிரபலங்கள் இரங்கல் | ரஜினி, கமல் எனும் இரு சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய பாரதிராஜா | பாரதிராஜா மறைவு; முதல்வர், திரையுலகினர் அஞ்சலி | தமிழ் சினிமாவை புரட்டி போட்ட பாரதிராஜா... | இயக்குனர் பாரதிராஜா காலமானார் | அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் |

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'வாரணாசி' படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோ இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது.
யுடியூபில் இரண்டு சேனல்களில் அந்த முன்னோட்டம் வெளியானது. ஒரு சேனலில் 24 மணி நேரத்தில் 11 மில்லியன் பார்வைகளும், இரண்டாவது சேனலில் 7.6 மில்லியன் பார்வைகளையும் பெற்றது. தற்போது இரண்டு சேனல்களின் பார்வைகளையும் சேர்த்து 23 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
பெரும் வரவேற்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ முன்னோட்டம், படம் மீதான அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஆன்மிகம், பேண்டஸி கலந்த ஒரு படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோ முன்னோட்டத்தின் வரவேற்புக்கு இயக்குனர் ராஜமவுலி, படக்குழுவினர், வாழ்த்திய பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்து தொடர்த்து எக்ஸ் தளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
2027 கோடை விடுமுறையில் இப்படம் வெளியாக உள்ளது.