2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சமீபத்தில் 71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகருக்கான விருதை ஜவான் படத்தில் நடித்ததற்காக ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. முழுக்க முழுக்க கமர்சியல் படத்தில் நடித்த ஒரு ஹீரோவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை எழுப்பி உள்ளது. அதேசமயம் மலையாளத்தில் ஆடுஜீவிதம் என்கிற படத்திற்காக பல வருடங்கள் உயிரைக் கொடுத்து அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்த பிரித்விராஜும் அந்த படமும் விருது குழுவால் கண்டுகொள்ளக்கூட படவில்லை என்கிற விஷயமும் கடந்த இரண்டு தினங்களாகவே பேசு பொருளாகி உள்ளது. குறிப்பாக சிறந்த துணை நடிகைக்கான விருது பெற்ற நடிகை ஊர்வசி கூட தனக்கு விருது கிடைத்தது பற்றி பெரிதாக சந்தோஷப்படாமல் உரிய திறமையாளர்களுக்கு விருது கிடைக்காமல் போய்விட்டதே என்கிற தனது ஆதங்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறும்போது, “ஆடுஜீவிதம் படம் எப்படிப்பட்ட படம் அதில் நடிகர் பிரித்விராஜின் நடிப்பு, இயக்குனர் பிளஸ்சியின் உழைப்பு எப்படிப்பட்டது. அதை விருது குழுவினர் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லையே. காரணம் வேறு ஒன்றும் இல்லை எம்புரான் படம் தான்” என்று கூறியுள்ளார்.
எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் குறித்த சில நிமிட காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பின்னர் அந்த காட்சிகள் நீக்கப்பட்ட பின்னரே படம் வெளியானது. அந்தப் படத்தை இயக்கியது நடிகர் பிரித்விராஜ் தான், அதனால் அதே பிரித்விராஜ் நடித்த ஆடுஜிவிதம் படத்தை திட்டமிட்டு விருது குழுவினர் புறக்கணித்துள்ளனர் என்றும், இதில் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்பதும் தான் ஊர்வசி சொல்ல வந்த கருத்து என்பது தெளிவாகிறது.