‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள முக்கிய ஸ்டார் குடும்பங்களில் சிரஞ்சீவியின் குடும்பத்தில்தான் நடிகர்கள் அதிகம். சிரஞ்சீவி, நாகபாபு, பவன் கல்யாண் என அண்ணன் தம்பிகள், அடுத்து அவர்களின் வாரிசுகள், சகோதரிகளின் வாரிசுகள் என பலரும் ஹீரோக்களாக இருக்கிறார்கள்.
சிரஞ்சீவி குடும்பத்தினரின் சமீபத்திய படங்கள் தோல்வியடைவது அவர்களது ரசிகர்களை வருத்தமடைய வைத்துள்ளது. சிரஞ்சீவி நடித்து கடைசியாக 2023ல் வெளிவந்த 'போலா சங்கர்' படம் தோல்வியடைந்தது. அவரது மகன் நடித்து கடைசியாக வெளிவந்த 'கேம் சேஞ்ஜர்' படம் இந்த வருடத் துவக்கத்தில் வெளிவந்து படுதோல்வி அடைந்தது. சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் நடித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த 'ஹரிஹர வீரமல்லு' படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தாலும் நஷ்டத்தில் தான் முடியும் என்பது லேட்டஸ்ட் தகவல்.
சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபு மகன் வருண் தேஜ் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'மட்கா' படம் தோல்வியைத் தழுவியது. வருண் தேஜ் சகோதரி நிஹரிகா கொனிடலா தமிழில் நடித்து கடைசியாக வந்த 'மெட்ராஸ்காரன்' படமும் தோல்வியை சந்தித்தது. சிரஞ்சீவியின் சகோதரி மகன் சாய் தரம் தேஜ், அவரது மாமா பவன் கல்யாணுடன் இணைந்து நடித்த 2023ல் வெளிவந்த 'ப்ரோ' படமும் தோல்விதான் அடைந்தது. சாய் தரம் தேஜ் தம்பி வைஷ்ணவ் தேஜ் நடித்து கடைசியாக வெளிவந்த 'ஆதிகேஷவா' படமும் தோல்வியில் இருந்த தப்பவில்லை.
சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ள 'விஷ்வம்பரா', பவன் கல்யாண் நாயகனாக நடித்துள்ள 'ஓஜி', ராம் சரண் நாயகனாக நடித்துள்ள 'பெத்தி' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்தப் படங்கள் அவர்களது வெற்றியை மீண்டும் மீட்டுக் கொண்டு வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.




