ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
'மங்காத்தா, பேக்பென்ச் ஸ்டூடண்ட், டபுள் எக்செல், ஜில்லா' போன்ற படங்களில் நடித்தவர் மஹத் ராகவேந்திரா. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தற்போது மஹத் ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற குத்துச்சண்டை சாம்பியன் கோயன் மசூரிடியரிடம் குத்துச்சண்டை கற்று வருகிறார். நடிப்பை தாண்டி அஜித் கார் ரேசில் புகழ்பெற்று வருவதை போன்று தானும் நடிப்பை தாண்டி குத்துச்சண்டையில் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, "சக்தி, வேகம், கவனம், சமநிலை மற்றும் திறமை ஆகியவற்றின் நம்பமுடியாத பயணம். இதில் பல சவால்கள் இருந்தாலும் அதை சமாளித்து பயிற்சி பெற்றேன். இது பிட்னஸ் தொடர்புடையது மட்டுமல்ல, ஒரு போராளியின் மனநிலையையும் எனக்குள் உருவாக்கியது. கோயனிடம் பயிற்சி பெற்றது சிறந்த அனுபவம். பாக்ஸிங் அரங்கமோ அல்லது கேமராவுக்கு முன்பு என்றாலுமே சரி வெற்றிபெற தேவையான கவனம், உத்தி மற்றும் மன ஒருமைப்பாடு பற்றிய ஆழமான புரிதலை எனக்கு அளித்தது.
நடிகர்கள் தங்களுக்கான ஸ்டீரியோ டைப்பை உடைக்க வேண்டும் என்பதை கார் ரேஸ் சாதனைகள் மூலம் எனக்கு அஜித் அண்ணாதான் புரிய வைத்தார். நான் விரும்பும் போட்டி விளையாட்டுகளில் பங்கேற்கவும், என் திறமையை நிரூபிக்கவும் இனிவரும் காலங்களில் விரும்புகிறேன். அடுத்தடுத்து எனது படங்களிலும் திறமையை மேம்படுத்தவும் இது உதவும்” என்றார்.