Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன்

05 மார், 2026 - 04:23 IST
எழுத்தின் அளவு:
Preity-Mukhundhan-plays-an-Anglo-Indian-woman
Advertisement


கவின் ஜோடியாக 'ஸ்டார்' படத்தில் அறிமுகமானவர் ப்ரீத்தி முகுந்தன். அதன்பிறகு 'கண்ணப்பா' தெலுங்கு படத்தில் நிமிலியாக நடித்தார். சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்ற பெற்ற 'சர்வம் மாயா' படத்தில் நிவின் பாலி காதலி, சாதியாவாக நடித்தார். தமிழில் 'இதயம் முரளி' படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக 'தாஷமக்கான்' படத்தில் நடித்து வருகிறார். இதில் பாப் இசை கலைஞனான ஹரிஷை காதலித்து, அவரது வளர்ச்சிக்கு உதவும் பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கிறார். படத்தை 'லிப்ட்' படத்தை இயக்கிய வினீத் பிரசாத் இயக்குகிறார்.

படம் குறித்து வினீத் பிரசாத் கூறும்போது “வடசென்னை மக்களை வன்முறையாளர்களாவே சினிமா சித்திரிக்கிறது. ஆனால் உண்மையில் அவர்கள் அன்பானவர்கள், சென்னையின் பூர்வகுடி மக்கள், அவர்களுக்கென்னு தனி உச்சரிப்பு, கலாசாரம் இருக்கிறது. அவர்களின் தனித்த இசைதான் பாப். அந்த பகுதியில் இருந்து பாப் உலகில் சாதிக்கத் துடிக்கும் ஒரு இளைஞனின் கதைதான் இது.

இதற்காக ஹரிஷ், 2 மாதங்கள் வரை பாப் இசை குழுவில் இணைந்து பணியாற்றி தன்னை தயார் செய்து கொண்டு அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார். படத்தில் ப்ரீத்தி முகுந்தனின் இடமும் கணிசமாக இருக்கிறது. பெரம்பூர் பகுதியில் குடியிருக்கும் ஆங்கிலோ - இந்தியப் பெண்ணாக வருகிறார். கதையின் எல்லா தன்மைகளையும் புரிந்துகொண்டு நடித்தார். ப்ரீத்தி முகுந்தன் இன்றைக்கு கேரளா வரைக்கும் எல்லோருக்கும் ரொம்பப் பிடித்த ஹீரோயினாக இருக்கிறார். ஹரிஷ் கல்யாணையும், ப்ரீத்தி முகுந்தனையும் மத்திய சென்னை பையனாகவும், பெண்ணாகவும்தான் படத்தில் பார்க்கலாம்” என்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் ஆனார் அஜித் அண்ணன்நடிகர் ஆனார் அஜித் அண்ணன் 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap