'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகர் பரத் 2000மாவது காலகட்டத்தில் பிரபல நடிகராக வலம் வந்தார். அதன் பின்னர் தொடர் தோல்விகளால் அவரது பட வாய்ப்பு குறைந்தது. இருப்பினும் அவரது நடிப்பில் வெளிவந்த காளிதாஸ், மிரள் போன்ற படங்கள் அவருக்கு கம்பேக் படங்களாக அமைந்தன. இதனால் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய் மில்டன், ரப் நோட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்கும் புதிய படத்தில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் ராஜ் தருண் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. இது கோலி சோடா படங்களின் தொடர்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் பாடகர் பால் டப்பா, நடிகர் ஆரி ஆகியோர் இணைந்தனர். தற்போது நடிகர் பரத் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.