எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் தெலுங்கில் முன்னணி நடிகரும், துணை முதல்வருமான பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'ஹரி ஹர வீரமல்லு'. பெரிய பட்ஜெட்டில் சரித்திர படமாக தயாராகி உள்ளது. இது பவன் கல்யாண் நடிக்கும் முதல் பீரியட் படம். இப்படம் 17ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் நடக்கும் ஆக்ஷன், அட்வென்ச்சர் படமாக எடுக்கப்பட்டுள்ளத. ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழைகளுக்கு உதவுவதற்காக ஊழல் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடும் கதை களத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
இதில் பாபி தியோல், நிதி அகர்வால், நாசர், ரகு பாபு, சுனில், நோரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கீரவாணி இசையமைக்கிறார் . இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வருகின்ற ஜூன் 12ம் தேதியன்று வெளியாகிறது.
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஒரு நேர்காணலில், "இந்த படத்தின் கிளைமாக்ஸிற்காக மட்டும் ரூ.20 கோடிக்கு கிராபிக்ஸ் காட்சியை உருவாக்கியுள்ளோம். இந்த கிராபிக்ஸ் பணிகளை ஆர்.ஆர்.ஆர், 2.0 படங்களில் பணியாற்றிய நிறுவனம் உருவாக்கி உள்ளது" என தெரிவித்துள்ளார்.