கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் | தயாரிப்பாளர் ஆனார் ஆண்ட்ரியா : மாஸ்க் படத்தில் வில்லத்தனமான கேரக்டர் | பிரித்விராஜூக்கு ஜோடியாக நடிக்க ஆசை ; பாக்யஸ்ரீ போர்ஸ் |

நடிகர் தனுஷ் நடிப்பில் குபேரா படம் வருகின்ற ஜூன் 20ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இதுதவிர தனுஷ் கைவசமாக இட்லி கடை, தேரே இஸ்க் மெயின் படமும், விக்னேஷ் ராஜா, மாரி செல்வராஜ், வெற்றிமாறன், தமிழரசன் பச்சமுத்து, ராஜ்குமார் பெரியசாமி போன்ற இயக்குனர்களின் படங்களும் கைவசம் உள்ளது.
இவை அல்லாமல் வாத்தி படத்திற்கு பிறகு மீண்டும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது வெங்கி அட்லூரி, சூர்யாவின் 46வது படத்தை இயக்குகிறார். இதை முடித்தவுடன் தனுஷை வைத்து இயக்கவுள்ளார். இதனை மீண்டும் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் தயாரிக்கின்றனர். இதன் மூலம் மீண்டும் வாத்தி கூட்டணி இணைகிறது. இந்த படத்திற்கு 'ஹானஸ்ட் ராஜ்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.




