டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழ் சினிமாவில் புகழ் அடைந்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமானது 'ராம்பந்து' என்ற தெலுங்கு படத்தில்தான். தமிழில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும் 'அட்டகத்தி' படம்தான் அவரை அடையாளம் காட்டியது. அதன் பிறகு தமிழில் முன்னணி நடிகை ஆனார்.
தெலுங்கில் 'கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி, மிஸ்மேட்ச், வேர்ல்ட் பேமஸ் லவ்வர், தக் ஜெகதீஸ், ரிபப்ளிக்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக 'சங்கராந்தகி வஸ்துனம்' படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் அடுத்த தெலுங்கு படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்னும் டைட்டில் வைக்காத இந்த படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மஹேஸ்வர் ரெட்டி தயாரிக்கிறார். குஷேந்தர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். பரத் மஞ்சிராஜு இசையமைக்கிறார்.
வீர் நாயகனாக நடிக்கிறார், பரத் தர்ஷன் இயக்குகிறார். இந்த படத்தின் துவக்க விழா ஹைதராபாத்தில் நடந்தது. படப்பிடிப்பு வரும் 19ம் தேதி தொடங்குகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்படுகிறது.