ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

நடிகை பிரீத்தி முகுந்தன் தமிழில் 'ஸ்டார்' படத்தில் நடித்து பிரபலமானவர். கடந்த ஆண்டில் வெளியான பான் இந்திய படமான 'கண்ணப்பா' படத்தில் நடித்து அவர் தென்னிந்தியளவில் மிக பிரபலமாகியுள்ளார். தமிழ் மொழி படத்தை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் பிஸியாக நடிக்க தொடங்கியுள்ளார் பிரீத்தி முகுந்தன்.
தெலுங்கில் ஹிட் சீரியஸ் படங்களை இயக்கிய சைலேஸ் கொலானு இயக்கத்தில் உருவாகும் 'எமோ எமோ இதி' என்கிற புதிய படத்தில் கதாநாயகன் ரோசன் மெக்கா உடன் இணைந்து பிரீத்தி முகுந்தன் நாயகியாக நடிக்கின்றார். இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு ஹேசம் அப்துல் வாகப் இசையமைக்கிறார். இவ்வருடம் தசரா பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளனர்.




