ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

யூடியூப் மூலம் பிரபலமாகி 'வேலையில்லா பட்டதாரி 2, நான் சிரித்தால், கைதி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கிஷோர் ராஜ்குமார். இதையடுத்து 'நாய் சேகர்' என்கிற படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கிஷோர் ராஜ்குமார் புதிதாக இயக்கி, கதாநாயகனாக புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை' என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் 'கொட்டுக்காளி' படத்தில் நடித்திருந்தார்.
சமீபகாலமாக நடிகர் விஜய் நடித்த பழைய படங்களின் தலைப்பில் 'லவ் டுடே, ஒன்ஸ் மோர், யூத்' ஆகிய படங்களின் வரிசையில் கோயம்பத்தூர் மாப்பிள்ளை தலைப்பையும் மீண்டும் பயன்படுத்தி வருகின்றனர் என்கிறார்கள்.




