நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

நடிகர் தனுஷ் தற்போது ‛போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார். இது தனுஷின் 54வது படமாக உருவாகிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார். கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், பிரித்வி பாண்டிராஜ் மற்றும் மலையாள நடிகர்கள் ஜெயராம், சுராஜ் வென்ஜரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கடந்த மூன்று மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பை சென்னை, ராமநாதபுரத்தில் படமாக்கி வந்தனர். இந்த படத்தில் கே.எஸ். ரவிக்குமார், தனுஷூக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே தனுஷூக்கு, அப்பாவாக கே.எஸ். ரவிக்குமார் 'தங்கமகன்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் மமிதா பைஜூ கிராமத்து இளம் பெண்ணாக நடித்து வருகிறார். குறிப்பாக ராம்நாடு தமிழ் வட்டார வழக்கை மமிதா பைஜூஅழகாக பேசுகிறார் என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.