வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

கவின் நடிக்கும் படம் மாஸ்க் படம் திரில்லர் பிளாக் காமெடி ஜானில் உருவாகிறது. விகர்ணன் இயக்கி உள்ளார். இதில் நடிகை ஆண்ட்ரியா இதுவரை நடித்துவிடாத சற்று வில்லத்தனமான வேடத்தில் நடிப்பதாக தகவல். ஆண்ட்ரியா கதை நாயகியாக நடித்த ‛மனுசி, பிசாசு 2' படங்கள் இன்னும் வராத சூழ்நிலையில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்த மாஸ்க் படம் நவம்பர் 21ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் கதையை கேட்டு வியந்து அவரே தயாரித்துள்ளார். அவருடன் இணைந்து சொக்கலிங்கம் என்பவரும் தயாரித்துள்ளார்.
சென்னையில் நடந்த இந்த பட பாடல் விழாவில் விஜய் சேதுபதி, இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கவினுக்கு ஜோடி ஆண்ட்ரியா கிடையாது, அவர் ட்ராக் தனி என்பது குறிப்பிடப்பட்டது. கவின் நடிக்கும் படம் என்பதால் அவர் நண்பரான இயக்குனர் நெல்சன் படத்திற்கு வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
விழாவில் பேசிய விஜய் சேதுபதி, ‛ஆண்ட்ரியா மெரினா பீச்சில் உள்ள சிலை மாதிரி இருக்கிறார். அவரை நானும் ரசித்தேன் என் மகனும் ரசிப்பான். வீட்டிற்கு போய் அவர் பெட்டில் தூங்குவது இல்லை. பிரிட்ஜில் அமர்ந்து கொள்கிறார் போல, அவ்ளோ பிரஷ்ஷாக இருக்கிறார்' என புகழ்ந்து பேசினார். மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கை, கஷ்டம், பணத்திருட்டும் கதையில் முக்கியமான விஷயங்களாம்.