ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா | பிளாஷ்பேக்: நட்சத்திர ஓட்டல்களில் படமான 'வேலைக்காரன்' | பிளாஷ்பேக்: சரித்திர படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்த கண்ணாம்பா | 2026 சினிமா நிலைமை இப்படி இருக்க போகிறது : திருப்பூர் சுப்ரமணியம் சொல்லும் அதிர்ச்சி தகவல் | கோவை தமிழ் பிடிக்கும்னு கிர்த்தி ஷெட்டி சொன்னது ஏன்? | ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! |

தமிழ் சினிமாவில் இப்போதுள்ள முன்னணி நடிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு படத்திலாவது நடித்து விடுகிறார்கள். ஆனால், சில சமயங்களில் அவர்களது புதிய படங்களுக்கான அறிவிப்பு மிகவும் காலதாமதமாகிவிடுகிறது.
இந்த வருடத்தில் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' என இரண்டு வெளியீடுகளைக் கொடுத்தவர் அஜித். 'குட் பேட் அக்லி' படம் வெளிவந்து ஆறு மாதங்களாகிவிட்டது. அஜித்தின் அடுத்த படமாக அவரது 64வது படத்தின் அறிவிப்பு தீபாவளிக்குள் வந்துவிடும் என்றார்கள். ஆனால், வெளியாகவில்லை.
விக்ரம் நடித்து இந்த வருடம் வெளிவந்த 'வீர தீர சூரன்' சுமாரான வெற்றிப் படமாக அமைந்தது. அப்படம் வெளியாகி ஏழு மாதங்கள் ஆகப் போகிறது. அவரது அடுத்த படம் பற்றி அறிவிப்பு வந்து அது டிராப் ஆகிவிட்டது. அவர் நடித்து முடித்த 'துருவ நட்சத்திரம்' முடிந்து சில வருடங்களாகியும் வெளியாகத் தாமதமாகிறது. எந்த இயக்குனருடன் விக்ரம் இணைந்து அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரியவில்லை.
சிவகார்த்திகேயன் ஒரே சமயத்தில் அடுத்தடுத்து 'மதராஸி, பராசக்தி' ஆகிய படங்களில் நடித்து வந்தார். 'மதராஸி' கடந்த மாதம் வெளியானது. 'பராசக்தி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. அடுத்து அவர் யார் படத்தில் நடிக்கப் போகிறார் என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது. வெங்கட் பிரபு, சிபி சக்கரவர்த்தி இருவரில் ஒருவரது படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்கிறார்கள்.