பிளாஷ்பேக்: நட்சத்திர ஓட்டல்களில் படமான 'வேலைக்காரன்' | பிளாஷ்பேக்: சரித்திர படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்த கண்ணாம்பா | 2026 சினிமா நிலைமை இப்படி இருக்க போகிறது : திருப்பூர் சுப்ரமணியம் சொல்லும் அதிர்ச்சி தகவல் | கோவை தமிழ் பிடிக்கும்னு கிர்த்தி ஷெட்டி சொன்னது ஏன்? | ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! |

ரஜினி நடித்த வெற்றிப் படங்களில் ஒன்று 'வேலைக்காரன்'. கே.பாலச்சந்தர் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். இந்த படம் 'நமக் ஹலால்' என்ற இந்தி படத்தின் ரீமேக்.
ரஜினியுடன், அமலா, பல்லவி, சரத்பாபு, கே.ஆர்.விஜயா, செந்தில், டெல்லி கணேஷ், நாசர், வி.கே.ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார்.
இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் உள்ள முக்கியமான 7 மற்றும் 5 நட்சத்திர ஓட்டல்களில் நடந்தது. சென்னை சோழா ஓட்டலில் தொடங்கி, டில்லி, மும்பை, ஆக்ரா, ஸ்ரீநகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் நடந்தது.
கதைப்படி கிராமத்தை சேர்ந்த ரஜினிகாந்த் ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை செய்வது மாதிரியான கதை. படம் முழுக்க ரஜினி பேசிய அரைகுறை ஆங்கிலம் கைதட்டல்களை அள்ளியது. காமெடி ஆக்ஷன் கலந்த இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது.
இதில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் என்னவென்றால் படத்தின் பாடல் பொறுப்பை தயாரிப்பாளர் கே.பாலச்சந்தர் ஏற்றுக் கொண்டார்.