சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, அவரது நடிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படம் 4K தரத்தில் புத்தம் புது பொலிவுடன், மீண்டும் திரைக்கு வருகிறது.
ஏஆர் ரஹ்மான் இசையில் உருவான “படையப்பா” படத்தில் ரஜினி உடன் சிவாஜி கணேசன், சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், மணிவண்ணன், அப்பாஸ், என பெரும் நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்தனர். அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே. சத்திய நாராயணா, எம். வி கிருஷ்ணா ராவ் மற்றும் கே விட்டல் பிரசாத் ஆகியோர் தயாரித்தனர். இணை தயாரிப்பாளராக பி.எல். தேனப்பன் பணியாற்றினார்.
1999ம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியான படையப்பா படம் அன்றைய காலகட்டத்தில் 200 திரையரங்குகளில் வெளியாகி 150 நாட்களைக் கடந்து, இந்தியளவில் மாபெரும் வசூலைக் குவித்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
இப்படம் தற்போதைய டெக்னாலஜியில் 4K தரத்தில் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு, நவீன ஒலி அமைப்புடன், புத்தம் புது பொலிவுடன் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.




