பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‛பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2'. இரண்டும் வசூலில் சக்க போடு போட்டன. கடந்தவாரம் இந்த இரண்டு படங்களையும் இணைத்து ‛பாகுபலி தி எபிக்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். அதற்கும் வரவேற்பு கிடைக்க சுமார் 40 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இந்நிலையில் தற்போது 'பாகுபலி தி எடர்னல் வார்' என்ற அனிமேஷன் படத்தை உருவாக்கி வருகின்றனர். இதை இஷான் சுக்லா என்பவர் இயக்கி உள்ளார். இதன் அறிமுக டீசர் வெளியாகி உள்ளது. பாகுபலி இறந்த பின்னர் அவரது ஆன்மாவை வைத்து புராண பின்னணியில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை வைத்து இப்படம் இருக்கும் என டீசரை பார்க்கையில் புரிகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இதன் டீசரை வெளியிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கை விட ஹிந்தியில் இந்த டீசருக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. 'பாகுபலி தி எடர்னல் வார்' அனிமேஷன் படமும் இரண்டு பாகங்களாக வெளியாகும் என தெரிகிறது. முதல்பாகம் 2027ல் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.