அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் | பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா | டைம் கொடுங்க.... விஜய் ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் : சேரன் | ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம் | விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் |

'லக்கி பாஸ்கர்' படம் துல்கர் சல்மானுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததோடு, அதன் பிறகு மலையாளத்தில் அவர் தயாரித்த 'லோகா சாப்டர் ஒன்' படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் அவர் நடித்து வருகிறார். தமிழில் தற்போது அவர் தயாரித்து நடித்திருக்கும் 'காந்தா' என்ற படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஒரு பிரியாணி அரிசி நிறுவனத்திற்கு விளம்பர தூதராகவும் செயல்பட்டு வருகிறார் துல்கர் சல்மான். அந்த நிறுவனத்தின் பிரியாணி அரிசியை சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள ஒரு கேட்டரிங் நிறுவனம் திருமண நிகழ்ச்சியில் சமைத்துள்ளார்கள். ஆனால் அந்த பிரியாணியை சாப்பிட்ட பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் தற்போது அந்த பிரியாணி அரிசி நிறுவனத்திற்கு மட்டுமின்றி அதில் விளம்பர தூதராக இருக்கும் நடிகர் துல்கர் சல்மான் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.




