பிளாஷ்பேக்: தமிழ் திரையிசையில் முதல் கானா பாடலை அறிமுகப்படுத்திய “பொம்மலாட்டம்” | 2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! |

திரைப்படத் தொழிலின் முக்கிய பிரச்னையாக 'பைரசி' இணையதளங்கள் உள்ளன. ஒரு காலத்தில் திருட்டு விசிடிக்களாக இருந்த பிரச்னை, ஆன்லைன் வளர்ச்சிக்குப் பிறகு படங்களை திருட்டுத்தனமாகப் பதிவு செய்து அதை இணையதளங்களில் பதிவு செய்வதாக மாறியது. மொபைல் ஆப்கள் வளர்ச்சிக்குப் பிறகு டெலிகிராம், வாட்சப் மூலம் படங்களை அப்படியே பகிர்வதும் நடந்து வருகிறது.
சமீபத்தில் தெலுங்கானா காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கையில் இப்படி பைரசியாக படங்களைத் திருட்டுத்தனமாகப் பதிவேற்றம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். அதன் தொடர்ச்சியாக தற்போது தெலுங்கானா காவல்துறை மற்றும் தெலுங்கு பிலிம் சேம்பர் இணைந்து நேற்று புதிய ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுள்ளார்கள்.
அதன்படி இருவரும் இணைந்து பைரசி மூலம் புதிய படங்கள் பரவுவதை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் முடிவை எடுத்துள்ளார்கள். கண்காணிப்பு, உடனடி நீக்கம், சட்ட நடவடிக்கை ஆகியவற்றிற்கு இந்த புதிய ஒப்பந்தம் வழி செய்ய உள்ளது.
இதற்கான மேம்படுத்தப்பட்ட டெக்னாலஜியைப் பயன்படுத்த உள்ளார்களாம். இதன் மூலம் பைரசி பெருமளவில் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொங்கலை முன்னிட்டு படங்களை வெளியிடும் தயாரிப்பாளர்கள் முதலில் பயனடைவார்கள்.
தமிழிலும் இப்படி ஒரு முயற்சியை காவல்துறையும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கங்களும் முன்னெடுக்கலாம். ஆனால், அவர்கள் நான்கைந்து சங்கங்களாகப் பிரிந்து இருக்கிறார்கள். ஒரு சங்கத்தின் தேர்தலுக்கே தற்போது மாறி மாறி குற்றம் சாட்டி வருகிறார்கள். தமிழ்த் திரையுலகத்தில் ஒரு ஒற்றுமை இல்லாத காரணத்தால்தான் திரையுலகிற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என மூத்த தயாரிப்பாளர்கள் வருத்தப்படுகிறார்கள்.




