ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

மலையாளத்தில் கடந்த வருடத்தில் திரைக்கு வந்த படம் 'மார்கோ'. இதனை ஹனிப் அதேனி இயக்கினார். இப்படம் உச்சகட்ட வன்முறை நிறைந்த படமாக வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது.
இதைத்தொடர்ந்து மார்கோ 2ம் பாகம் உருவாகிறது என அறிவித்தும் அது இன்னும் துவங்கப்படவில்லை. இந்த இயக்குனரின் அடுத்த படம் குறித்து பல தகவல்கள் பரவி வந்த நிலையில் தற்போது இவர் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். முதலில் தில் ராஜூ தரப்பில் நடிகர் அஜித் குமாரை தான் அணுகியுள்ளனர்.
ஆனால், அஜித் தரப்பில் சரியான பதில் கிடைக்காததால் இப்போது அந்த கதையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.




