ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

'மெஹந்தி சர்க்கஸ்' படத்தில் நாயகனாக நடித்த மாதம்பட்டி ரங்கராஜ், சமையல் கலைஞராகவும் இருக்கிறார். பிரபலங்களின் பல நிகழ்ச்சிகளுக்கு கேட்ரிங் சேவைகளை செய்து வருகிறார். இவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா, ரங்கராஜ் தன்னை காதலித்து ஏமாற்றி திருமண மோசடி செய்துவிட்டதாகவும், அவரால் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் போலீஸ் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக மகளிர் ஆணையத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, ஜாய் கிரிசல்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மறுபுறம், மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க போலீஸிற்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.
நேற்று (நவ.,4) ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'மகளிர் ஆணையம் முன்பு நடந்த விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்ததையும், இந்த குழந்தை தன்னுடையது தான் என்றும் ஒப்புக் கொண்டதாக' தெரிவித்திருந்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட அறிக்கையில் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதில், ''நான் ஜாய்யை தன்னிச்சையாக திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை. என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது. என்னிடம் பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் கட்டாயப்படுத்தப்பட்டு திருமணம் நடைபெற்றது.
ஆணையத்தின் முன், பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.1.5 லட்சமும், தனது பி.எம்.டபிள்யூ காருக்கு மாதம் ரூ.1.25 லட்சம் இ.எம்.ஐ.,யும் செலுத்த வேண்டும் என ஜாய் கோரிக்கை வைத்தார், நான் மறுத்துவிட்டேன். டிஎன்ஏ பரிசோதனையை நான் ஒருபோதும் மறுத்ததில்லை. அந்த குழந்தை என்னுடையது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அந்த குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என விசாரணை அதிகாரி முன் பதிவு செய்துள்ளேன். உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்பிப்பேன், மேல்முறையீடு செய்வேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த அறிக்கை வைரலாகி வருகிறது.