என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

‛சிக்கந்தர், குபேரா' படங்களுக்கு பிறகு ‛தி கேர்ள் ப்ரெண்ட், தமா, மைசா' போன்ற படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இதில் தமா படத்தில் ஆயுஷ்மான் குரானா, நவாசுதீன் சித்திக் ஆகியோருடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா. ஆதித்யா சர்போதார் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் காதல் கலந்த ஹாரர் காமெடி கதையில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகி இருக்கிறது.
அதில் பல மிரட்டலான திரில்லிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதுதவிர, ராஷ்மிகா கதையின் நாயகியாக நடித்துள்ள மைசா படத்தின் டிரைலரும் கடந்த மாதத்தில் வெளியான நிலையில் அப்படத்தின் வெளியீட்டு தேதியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.