தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? |
தென்னிந்திய நடிகைகளில் தற்போதைய சூழ்நிலையில் அதிகமான கிசுகிசுக்களில் அடிபடும் பெயர் ராஷ்மிகா மந்தனா. ஹிந்தி சினிமாவிலும் பிஸியாக உள்ளவர் பற்றி தினமும் ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. அவருக்கும் நடிகர் விஜய் தேவரகொன்டாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், இருவருமே அது குறித்து இன்னும் வெளிப்படையாக அறிவிக்காமல் உள்ளார்கள்.
இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கை பற்றிய ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார். "உள்ளே என்ன நடக்கிறது என்பதை இந்த உலகம் அறியாது. நமது தனிப்பட்ட வாழ்க்கையில் கேமராவை வைக்க முடியாது. நாங்கள் எங்கள் தனிப்பட்ட செய்திகளை ஆன்லைனில் பகிரும் வகையான மக்கள் அல்ல. மக்கள் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல. எங்கள் தொழில்முறை வாழ்க்கை பற்றிய கருத்துக்களே முக்கியம்,” என்று தெரிவித்துள்ளார்.
கன்னடத் திரையுலகத்தில் ராஷ்மிகாவைத தடை செய்துள்ளார்களா என்ற கேள்விக்கு, "இதுவரை, நான் தடை செய்யப்படவில்லை,” என்று பதிலளித்துள்ளார்.
கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டியுடன் ராஷ்மிகாவுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமண நிச்சயம் நடந்தது. அதன்பின் அதை முறித்துக் கொண்டனர். அதற்கடுத்து அவர் கன்னடப் படங்களிலும் நடிப்பதில்லை. ரக்ஷித் ஷெட்டியும், 'காந்தாரா' இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டியும் நெருங்கிய நண்பர்கள்.
'காந்தாரா சாப்டர் 1' படத்தைப் பார்த்த பின்பு படக்குழுவினருக்கு மெசேஜ் அனுப்பியதாகவும் அவர்கள் அதற்கு நன்றி தெரிவித்து பதிலளித்தாகவும் கூறியுள்ளார் ராஷ்மிகா.