அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா |

நடிகர் கார்த்தி நடிப்பில் வா வாத்தியார், சர்தார் 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன. அடுத்து டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் அவரது 29வது படமாக 'மார்ஷல்' படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரீயர் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர். சாய் அபயன்கர் இசையமைக்கிறார். 1960களில் ராமேஸ்வரம் பின்னணியில் கடல் கொள்ளையர் கதை களத்தில் உருவாகிறது.
இதில் கதாநாயகியாக மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சத்யராஜ், பிரபு, லால், ஈஸ்வரி ராவ், ஜான் கொக்கென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் நிவின் பாலி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் நிவின் பாலி நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளாராம். இதையடுத்து இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இப்போது நடிகர் ஜீவா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என தகவல் தெரிவிக்கின்றனர்.