பவன் கல்யாண் மீது முன்னாள் அதிகாரி வழக்கு | மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி |
ஆந்திர துணை முதல்வராக இருக்கும் பவன் கல்யாண் நடித்த 'ஹரிஹர வீரமல்லு' படம் கடந்த மாதம் வெளியானது. எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் படம் நஷ்டத்தை சந்தித்தது. இப்படத்திற்காக சில நாட்கள் தன்னுடைய அரசு வேலைகளைத் தள்ளி வைத்துவிட்டு, படத்திற்கு புரமோஷன் செய்தார் பவன் கல்யாண்.
இந்நிலையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், லிபரேஷன் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான விஜயகுமார் என்பவர் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பவன் கல்யாண் மீது வழக்கு தொடுத்துள்ளார். அரசு பணத்தை அவரது படத்தின் புரமோஷனுக்காக அவர் பயன்படுத்தியுள்ளதாகவும், டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியதாகவும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.
"தனது வருமானத்திற்காக திரைப்படங்களில் நடிப்பதாக பவன் பகிரங்கமாகக் கூறியதன் மூலம், அவர் விதிகளை மீறியதை ஒப்புக்கொண்டார்," என்று அவர் கூறி, இது 1988ம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழும் வருவதாகவும், இது பொது பிரதிநிதிகள் தங்கள் பதவிகளை தனிப்பட்ட லாபத்திற்காகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதாகவும் தெரிவித்தார்.
பவன் கல்யாணை அமைச்சரவையிலிருந்து நீக்கக் கோரி தலைமைச் செயலாளருக்கும், ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநர் ஜெனரலுக்கும் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அவர் உயர்நீதிமன்றத்தை அணுகியதாகவும் கூறினார்.
வழக்கை ஏற்றுக்கொண்ட பின்னர், நீதிமன்றம் சிபிஐ மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு வழக்கறிஞர்களை பதிவேட்டில் சேர்க்க உத்தரவிட்டது. விசாரணை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.