ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
‛காந்தாரா' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரிஷப் ஷெட்டி, அதன் அடுத்த பாகமாக ‛காந்தாரா சாப்டர் 1' படத்தை இயக்கி, நடித்திருந்தார். இப்படம் கடந்த அக்டோபர் 2ம் தேதி ரிலீசாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் ரிஷப் ஷெட்டி பேசியதாவது: முதல் பாகத்தின் வெற்றியால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதை உணர்ந்தேன். அந்த அழுத்தம் எனக்கு பாதிப்பை தந்திருந்தால், என்னால் முழுமையாக கவனம் செலுத்த முடியாது. முதல் பாகத்தை விட பெரியதாகவும், ஆழமான அர்த்தமுடையதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக 3 ஆண்டுகள் சாப்டர் 1க்காக அர்ப்பணித்தேன். இதையும் முந்தைய படத்தை போல ரசிகர்கள் விரும்புவார்கள் என நம்புகிறேன்.
பான் இந்தியா என்ற வார்த்தை பெரியதாக இருக்கலாம், ஆனால் நமக்குள் அடிப்படை ஒற்றுமை உள்ளது. வெளிப்படையில் நமது மரபுகள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் அதன் உள்ளார்ந்த சாரம் ஒன்றே. நாம் அனைவரும் பழங்குடி சமூகங்களாகத் தொடங்கினோம், இறுதியில், நம்பிக்கை நம்மை ஒன்றிணைக்கிறது. இந்தியாவின் அடையாளம் அதன் மண் மற்றும் அதன் விவசாய வேர்களுடன் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளது. மக்கள் காலப்போக்கில் பரிணமிக்கிறார்கள், ஆனால் அவர்களின் சாராம்சம் அவர்களின் மனிதநேயம் அவர்களின் தோற்றத்தில் வேரூன்றியுள்ளது. அதனால்தான் காந்தாரா அனைவருக்கும் ஏற்ற படமாக இணைந்தது. ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒவ்வொரு பாரம்பரியத்திற்கும், ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமான ஒரு கதையை இது பிரதிபலிக்கிறது.
படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் புதிய சவாலாக இருந்தது. நான் இயக்கும் 5வது படமாக இருந்தாலும், முதல் படத்தை இயக்குவது போல் இருந்தது. ஒரு காலத்தில் 1.4 கோடி ரூபாயில் படம் எடுத்தது பெரிய விஷயமாயிருந்தது. ஆனால் 'காந்தாரா'வுக்குப் பிறகு நான் எதிர்பார்க்காத அளவில் புகழும் விருதுகளும் வந்தன. படப்பிடிப்பின் போது சிலர் உயிரிழந்ததாக வந்த செய்திகள் உண்மையில்லை. படப்பிடிப்பு குழுவில் இருந்தவர்கள் யாரும் இறக்கவில்லை. ஆனால், படத்திற்கு சம்பந்தப்பட்ட மூவர் உயிரிழந்தனர். ஒருவர் ரிகர்சல் பார்க்கும் போது மாரடைப்பு வந்து இறந்தார், இன்னொருவர் கோயில் அருகே ஆற்றில் நீந்தி குளிக்கும் போது மூழ்கி இறந்தார், மற்றொருவர் என் நெருங்கிய நண்பரும், திறமையான கலைஞருமான ராகேஷ் என்பவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இறந்தார். இவரின் இழப்பால் எங்கள குழுவே பாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.