தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை | சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படப்பிடிப்பு நாளை துவக்கம் | பிளாஷ்பேக்: ஊதியத்தை உயர்த்திக் கேட்டு, உற்சாகமிகு நகைச்சுவையை வழங்கிய டி ஆர் ராமச்சந்திரனின் “சபாபதி” | அட்லி - பிரியா தம்பதியின் மகளுக்கு 'மியூ' பெயர் சூட்டல் | 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தை மிஸ் செய்தது ஏன்? ஜெய் விளக்கம் | அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்? | அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஏன் அந்த இலாகா? நடிகர் விஷால் கேள்வி | பஹத் பாசில் - பிரேம்குமார் இணையும் புதிய படம் துவக்கம் | விஜய்க்கு அவகாசம் தரணும்... ரஜினியுடன் போட்டிதான், பொறாமை இல்லை: கமல் பேட்டி | கருப்பு : இரண்டே நாளில் 50 கோடி வசூல் ? |

தமிழில் தனுஷ் இயக்கிய ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடி இருந்த பிரியங்கா மோகன், தற்போது கவின் நடிக்கும் ஒன்பதாவது படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், தெலுங்கில் பவன் கல்யாணத்துக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள ‛ஓஜி' என்ற படம் கடந்த 25ம் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 250 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ஒன்பது நாட்களில் 361 கோடி வசூலித்துள்ளது.
இப்படியான நிலையில் இன்று ஹைதராபாத்தில் ஒரு துணிக்கடையை திறந்து வைத்திருக்கிறார் பிரியங்கா மோகன். அந்த கடையை அவர் திறந்து வைக்க வருகிறார் என்றதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு கூடியுள்ளார்கள். இதன் காரணமாக தனது காரில் இருந்து கடையை நோக்கி சென்ற பிரியங்கா மோகனை ரசிகர் கூட்டம் சூழ்ந்து கொள்ள அவரை ரொம்ப கஷ்டப்பட்டு கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். ரசிகர்களின் தள்ளுமுள்ளு அதிகமாக இருந்ததால் கடும் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார் பிரியங்கா மோகன். அதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.