பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். தற்போது தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஓஜி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற 25-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற போது அதில் பிரியங்கா மோகனும் கலந்து கொண்டார்.
அவரிடத்தில், பிரியங்கா மோகனுக்கு நடிப்பு வரவில்லை, டான்ஸ் ஆட தெரியவில்லை என்று சோசியல் மீடியாவில் தொடர்ந்து மீம்ஸ்கள் வெளியாகி வருகிறதே என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், ‛‛என்னை பிடிக்காதவர்கள் இதுபோன்று என்னை பற்றி காசு கொடுத்து மீம்ஸ் போட சொல்கிறார்கள். அவர்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இது போன்ற மீம்ஸ்களுக்கெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. அதைப் பார்த்து நான் மனசு உடைந்து போவதுமில்லை. இன்னும் என்னை திடப்படுத்திக் கொண்டு வருகிறேன். அதனால் யார் மீம்ஸ் போட்டால் எனக்கென்ன...'' என்று கோபத்துடன் பதில் கொடுத்திருக்கிறார் பிரியங்கா மோகன்.




