தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
2019ல் வெளியான 'ஒந்த் கதே ஹெல்லா' கன்னடப் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். 2021ல் வெளிவந்த 'டாக்டர்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் 'எதற்கும் துணிந்தவன், டான், டிக் டாக், பிரதர்,' ஆகிய படங்களில் நடித்தார்.
தெலுங்கில் 'கேங் லீடர்' படத்தில் நானியின் ஜோடியாக அறிமுகமானார். அதன்பின் 'ஸ்ரீகாரம், சரிபோத சனிவாரம்' ஆகிய படங்களில் நடித்தார். பவன் கல்யாண் ஜோடியாக அவர் முதல் முறையாக நடித்த 'ஓஜி' படம் கடந்த வாரம் வெளியாகி 200 கோடி வசூலைக் கடந்தது.
அப்படத்தின் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், “மிகவும் அர்த்தமுள்ள நினைவுகளின் சிறிய விஷயங்கள். எங்கள் படத்தின் மீது இவ்வளவு அன்பை பொழிந்ததற்கு அனைவருக்கும் நன்றி. எங்கள் இதயங்கள் நன்றியால் நிரம்பி வழிகின்றன. உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில் எங்கள் படம் OG ஐ அனுபவியுங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.