ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் | நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்! | 'கருப்பு' படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல் | கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை | மேடையில் 'கெட்ட வார்த்தை' பேசி பின் சமாளித்த ராஷ்மிகா | முதல்வர் விஜய்க்கு தனித்தனியே கோரிக்கை வைத்த கமல்ஹாசன், விஷால் |

‛தசரா' பட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில் நானி 'தி பாரடைஸ்' படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இதன் க்ளிம்ஸ் வீடியோ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 26ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகரான மோகன் பாபு நடித்து வருகிறார் என தகவல் வெளியானது. தற்போது இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் மோகன் பாபு சிகன்ஜா மாலிக் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். மேலும், இந்த கதாபாத்திரத்திற்காக மோகன் பாபு கடுமையான உடற்பயிற்சி செய்து உடலை கட்டுமஸ்தானாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.