சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மறுபுறம் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த படம் 'கோர்ட் ஸ்டேட் vs நோ படி'. குறைந்த பட்ஜெட்டில் உருவான படம் பலமடங்கு வசூலைக் குவித்தது. ஏற்கனவே இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்த்தின் அப்பா தியாகராஜன் வாங்கியுள்ளார். இந்த படத்தை தமிழில் தியாகராஜன் இயக்குகிறார் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் பிரியதர்ஷி கதாபாத்திரத்தில் பிரசாந்த் மற்ற முதன்மை கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசனின் மகன் க்ரித்திக் மற்றும் ராஜ்குமார், தேவயாணி தம்பதியினரின் மகள் இனியா என இருவரும் நடிக்கின்றனர்.