நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

கடைசியாக ‛சுபம்' என்ற தெலுங்கு படத்தை தயாரித்து அதில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் சமந்தா. அந்தப் படத்தை தொடர்ந்து தனது த்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் சார்பாக ‛மா இண்டி பங்காரம்' என்ற ஒரு படத்தையும் தயாரித்து தான் கதையின் நாயகியாக நடிக்கப் போவதாக ஓராண்டுக்கு முன்பாகவே அறிவித்திருந்தார் சமந்தா. ஆக்சன் கதையில் உருவாகும் அப்படத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த சமந்தா தனது அடுத்த படம் குறித்த ஒரு தகவல் கொடுத்திருக்கிறார்.
அதில், ‛‛எனது அடுத்த தெலுங்கு படம் ‛மா இண்டி பங்காரம்'. இந்த படத்தை என்னுடைய த்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நந்தினி ரெட்டி இந்த படத்தை இயக்குகிறார். இம்மாதம் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.