‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

சினிமாவைப் பொறுத்தவரை நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வதும் விவாகரத்து பெறுவதும் பின்னர் மீண்டும் மறுமணம் செய்து கொள்வதும் அவ்வப்போது நடப்பது தான். அந்த வகையில் நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடம் இருந்து பிரிந்து விவாகரத்து பெற்று தனியே வசிக்கிறார். இந்த நிலையில் பேமிலி மேன் வெப் சீரிஸில் நடித்தபோது அதன் இயக்குனர்களில் ஒருவரான ராஜ் நிடிமொருவுடன் சமந்தாவுக்கு நட்பு ஏற்பட்டது.
அதன் பிறகு அவர்கள் பழகும் விதம், வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது அனைத்தையும் பார்த்து அவர்கள் இருவருக்கும் காதல் என்பது போல செய்திகள் பரபரப்பாக வெளியாகின. இதை இருவரும் மறுக்கவும் இல்லை. இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கூட சொல்லப்பட்டு வரும் நிலையில் இவர்கள் இணைந்து பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் கிடைப்பது என்பது அரிதாக தான் இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ராஜை, சமந்தா காதலுடன் கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பது போன்று தானாகவே முன் வந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் ராஜும் தனது மனைவியிடம் இருந்து 2022-ல் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்பவர் என்பதால் விரைவில் சமந்தாவும் இயக்குனர் ராஜும் தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டால் கூட அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை என்றே சொல்கிறார்கள்.