பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

பிரபுசாலமன் இயக்கும் கும்கி 2 படத்தில் ஹீரோவாக நடித்து இருப்பவர் மதி. இவர் லிங்குசாமி உறவினர் என்று கூறப்பட்ட நிலையில் மதி யார் என்பது குறித்து லிங்குசாமி விரிவாக பேசியுள்ளார். அவர் கூறுகையில் 'எங்கள் குடும்பத்தில் பெண் குழந்தைகள் இல்லை. என் அண்ணனுக்கு பெண் குழந்தை பிறக்க, அவளுக்கு சரண்யா என்று பெயரிட்டு, நாங்கள் பாசமாக வளர்ந்தோம். சென்னையில் அவர் படிக்க வந்தபோது, மதியை காதலித்தார். அது எங்கள் குடும்பத்திற்கு தெரியாது. ஆனால், மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தபோது பிடி கொடுக்கவில்லை. அப்போது மதி காதல் தெரிய வந்தது.
என் தம்பி உட்பட பலரும் அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மதியை ஒரு வழி ஆக்கிவிடுவோம் என்ற முடிவில் இருந்தனர். ஒருநாள் என்னை சந்திக்க வந்த மதி தனது உண்மையான காதலை சொல்லி பீல் பண்ணினார். இவர் சரியான தேர்வு என நினைத்து, நானே சாமியார் வேடமிட்டு குடும்பத்தில் சென்று பேசினேன். கடைசியில் அந்த காதல் திருமணத்தில் முடிந்தது. அந்த மதியை கும்கி 2 படத்தில் ஹீரோவாக ஆக்கினோம்' என்றார்.
மதியும் கும்கி 2 படவிழாவில் லிங்குசாமி, அவர் தம்பி போஸ் மற்றும் தனது மனைவி சரண்யாவுக்கு நன்றி சொன்னார்.