லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி | இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் |

ஆனந்தம், ரன், சண்டக்கோழி, அஞ்சான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் லிங்குசாமி . அதேபோல் ஒரு சில படங்களை தயாரித்துள்ளார். தற்போது தனது திருப்பதி பிரதர்ஸ் மூலம் ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். அமர்க்களம், அட்டகாசம், ஜெமினி, வசூல்ராஜா போன்ற படங்களை இயக்கிய சரண் இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார். இந்த படத்தை லிங்குசாமியின் உதவி இயக்குநர் ஒருவர் இயக்குகிறார். நேற்று இதன் படப்பிடிப்பு மலேசியாவில் துவங்கியது. இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் விதார்த் மற்றும் நட்டி நட்ராஜ் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




