96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி | லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி | இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா |

தமிழில் 96, மெய்யழகன் ஆகிய மென்மையான படங்களை இயக்கியவர் பிரேம் குமார். இவரின் அடுத்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியாகி பின்னர் அந்த படம் தள்ளிப்போனது. அதன்பிறகு மலையாள நடிகர் பஹத் பாசிலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு நடிகர் நானியை சந்தித்து பிரேம் குமார் ஒரு புதிய கதையை கூறியுள்ளார். இந்த கதை நானிக்கு பிடித்துள்ளதால் அவர் நடித்து வரும் படங்களை முடித்தவுடன் இந்த கதையில் நடிக்கிறேன் என உறுதியளித்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.




