ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
வீர தீர சூரன் படத்துக்குபின் விக்ரம் யார் படத்தில் நடிக்கப் போகிறார். அந்த பட தயாரிப்பாளர் யார் என்று தெரியாமல் அவருடைய ரசிகர்கள் தவித்து வந்தார்கள். மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கலாம் என்று ஒரு பேச்சு வந்தது. அதேப்போல் 96 , மெய்யழகன் பட இயக்குனர் பிரேம்குமார் அடுத்து யாரை வைத்து படம் இயக்கப் போகிறார். தயாரிப்பாளர் யார் என்ற கேள்வியும் எழுந்தது. பிரதீப் ரங்கநாதன் படத்தை அவர் இயக்கப் போகிறார் என்று கூறப்பட்டது. இப்போது அது எதுவும் நடக்கவில்லை. புது கூட்டணி உருவாகிவிட்டது.
ஆம், வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விக்ரம் ஹீரோ, பிரேம் குமார் இயக்கப் போகிறார் என்று நேற்று முறைப்படி அறிவிப்பு வெளியாகிவிட்டது. தங்கலான், வீர தீர சூரன் ஓகே என்றாலும் பெரிய ஹிட்டாகவில்லை. அதனால், விக்ரம் ஒரு பெரிய வெற்றிக்காக பிரேம் குமாரை தேர்ந்தெடுத்தார் என தகவல். வேல்ஸ் நிறுவனம் 10 பெரிய படங்களை தயாரிப்பதாக ஒரு அறிவிப்பு வெளியானது. அந்த பட்டியலில் விக்ரம் படமும் சேர்ந்துள்ளது.