‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் | அடுத்து கொரோனா வந்தால் சென்னை காலி ; பொள்ளாச்சியில் செட்டில் ஆக ஆசை: விஜய் ஆண்டனி | சாய் பல்லவிக்கு எழுதப்பட்ட கதையில் நடித்த சமந்தா | ஆர்யா 40 : படப்பிடிப்பு நிறைவு | ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி | 'கருப்பு' - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் | ரூ.230 கோடி வசூலைக் கடந்த 'பெத்தி' |

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் ‛96' என்ற படத்தை இயக்கிய பிரேம் குமார், அதன்பிறகு அரவிந்த்சாமி, கார்த்தி நடிப்பில் ‛மெய்யழகன்' படத்தை இயக்கினார். இந்த நிலையில், அடுத்தபடியாக மீண்டும் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார் பிரேம் குமார். ஆனால் சமீபத்தில், 96 படத்தின் இரண்டாம் பாகத்தை பிரதீப் ரங்கநாதனை வைத்து அவர் இயக்கப் போவதாக ஒரு புதிய செய்தி பரவி வந்தது.
இதுகுறித்து பிரேம்குமார் தரப்பில் வெளியாகியுள்ள ஒரு செய்தியில், தற்போது அவர் ஒரு திரில்லர் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்தில்தான் பிரதீப் ரங்கநாதன் நடிக்கப்போகிறார். அது சம்பந்தமாக அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். மற்றபடி, 96 படத்தின் அடுத்த பாகத்தில் முதல் பாகத்தில் நடித்தவர்களே நடிப்பார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார்கள்.