மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? | ‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா |

நடிகை சமந்தா தெலுங்கு சினிமாவில் அறிமுகமான காலகட்டத்திலேயே நடிகர் நாக சைதன்யாவுடன் 2010ல் இணைந்து நடித்தபோது காதல் வயப்பட்டு கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில வருட திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2021ல் அவர்கள் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு ஒரு பக்கம் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி பிறகு அது உண்மையாகி கடந்த வருடம் டிசம்பர் நான்காம் தேதி திருமணமும் செய்துகொண்டனர். இதோ இன்று தம்பதியினர் முதல் திருமண நாளை கொண்டாடுகின்றனர்.
அதேபோல கடந்த மூன்று வருட காலகட்டத்தில் நடிகை சமந்தாவும் பிரபல இயக்குனர் ராஜ் நிடிமொருவுடன் நட்பாக பழகி பின்னர் அது காதலாக மாறி கிசுகிசுகளாக வெளியாகி கடந்த ஒன்றாம் தேதி அவர்கள் இருவரும் திருமணத்தில் இணைந்து தாங்கள் காதலில் இருந்ததை உறுதிப்படுத்தியும் விட்டனர். இவர்களது திருமணம் டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெற்றது. அதாவது நாக சைதன்யா மறுமணம் செய்து ஒரு வருடம் முடிவடைவதற்குள் சமந்தாவும் தனக்கான துணையை தேடி இல்லற வாழ்க்கையில் மீண்டும் நுழைந்துள்ளார்.
பொதுவாக சினிமாவில் அடுத்த ஒரு வருடத்திற்குள் உன்னை போல நானும் பெரிய ஆளாகி காட்டுகிறேன் என்று தங்களது எதிரிக்கு சவால் விடுவார்கள். ஒருவேளை அதுபோல தனது முன்னாள் கணவர் நாக சைதன்யா திருமணம் செய்து கொண்ட அடுத்த ஒரு வருடம் முடிவதற்குள் தானும் திருமண செய்து கொள்வேன் என மனதிற்குள்ளேயே சபதம் செய்து அதை மிகச் சரியாக சமந்தா நிறைவேற்றியுள்ளாரோ என்னவோ?